More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கதிர் ஆனந்தின் வெற்றி!
கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கதிர் ஆனந்தின் வெற்றி!
Mar 20
கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கதிர் ஆனந்தின் வெற்றி!

இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண்டுமா? என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.



வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி ஆறு மணி நேரம் கடந்து மதியம் 1 மணி ஆனபிறகும் கூட 30 சதவிகிதம் கூட வாக்குப் பதிவாகவில்லை என்ற தகவல் கதிர் ஆனந்த், ஏ.சி. சண்முகம் இருவருக்குமே கொஞ்சம் கலக்கத்தைதான் ஏற்படுத்தியது. ஒருவேளை தேர்தலையே மக்கள் விரும்பவில்லையா அல்லது வாக்காளர்களுக்கு வாரி வழங்காததால் வாக்களிக்கும் சதவிகிதம் குறைந்துவிட்டதோ என்ற விவாதம் இரு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பேசப்பட்டது.



இந்த நிலையில்தான் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிடுகிடுவென வாக்குப் பதிவு சதவிகிதம் ஏறத் தொடங்கியது. திமுகவினருக்கு அப்போதுதான் உயிரே வரத் தொடங்கியது. காரணம் சாரை சாரையாய முஸ்லிம் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர்.  மதியம் வரை மந்தமாகிக் கொண்டிருந்த வாக்குப் பதிவுக்குக் காரணமும் முஸ்லிம் வாக்காளர்கள்தான். மதியத்துக்குபின் சுறுசுறுப்பாக ஆனதற்கும் காரணமும் அவர்கள்தான். காரணம் காலை 11 மணிக்குதான் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப் பிரிவை நீக்கும் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். 



ஆங்கில மீடியாக்கள் மட்டுமல்ல தமிழ் மீடியாக்களிலும் 11 மணிக்கு மேல் இதுதான் பெரும் செய்தியாக பேசப்பட்டது. குறிப்பாக தமிழ் சேனல்களில் வேலூர் தேர்தலை விட காஷ்மீர் விவகாரம்தான் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதியில் கணிசமான உருது பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் இந்த காஷ்மீர் பிரச்சினை தீவிரமாகப் பரவியது.



மதியத்துக்குப் பின் பலரது செல்போன்களிலும் இந்த செய்திகள் பகிரப்பட்டன. ஏற்கனவே பாஜக மீது அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் முஸ்லிம்கள், காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு செய்ததை ஏற்கத் தயாராக இல்லை. மீடியாக்கள் வழியாக காஷ்மீர் விவகாரம் அதிகமாகப் பரவியதையடுத்து மதியத்துக்கு மேல் சாரை சாரையாக திரண்டு வாக்களிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே முத்தலாக் பிரச்சினைக்கு ஓ.பி.ஆர். ஆதரவு அளித்ததால் அதிமுகவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண்டுமா? என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டுக் கொண்டனர். ஆக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு கடைசி நேரத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb14

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி

May15

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற

Sep17

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைà

Jul01

கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்

Jul24

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்à®

Jun29
Aug27

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா

Apr21

போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சிà

Feb25

தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திà®

Mar18

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இà

Apr07

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்à®

Jun30
Jan20

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடுமà¯

Mar04

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டதà

Feb22

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (03:49 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (03:49 am )
Testing centres