இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த மாத துவக்கத்தில் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிய இலங்கை, இந்த தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனத்துக்கு மேலும் லட்சக்கணக்கான டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட தடுப்பூசியை போடுவதால் ரத்தம் உறைவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த தடுப்பூசி போடுவதை சில ஐரோப்பிய நாடுகள் சிறிதுகாலம் நிறுத்தின. ஆனால் அந்த தடுப்பூசி போடுவதால் ஆபத்தில்லை, அதை தொடரலாம் என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவை அறிவித்தன.
அதைத் தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணியை ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தொடங்கின. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒரு புத்த துறவி உள்பட 3 பேர் இறந்தனர்.
ஆனால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளால்தான் இறந்தனர், தடுப்பூசி போட்டதால் உயிரிழக்கவில்லை. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எவருமே இறக்கவில்லை என்று அந்நாட்டின் ஆரம்ப சுகாதார சேவைகள் மந்திரி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று தெரிவித்தார்.
இதுவரை, இலங்கை மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள
ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து 3000க்கும் மேற்பட்ட வாடிக
மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தத
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
நித்யானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகளை புற
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக் கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்கும உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்