அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து தற்போது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,500 , அரிசிஅட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை, செய்யாறு தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது, மக்களை நம்பியே அதிமுக உள்ளது; மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 6 சிலிண்டர் விலை இல்லாமல் வழங்கப்படும் . அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தரப்படும் என்று கூறிய நிலையில் இன்று அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டரும், வாஷிங் மிஷினும் அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து ரூ. 835 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சிலிண்டர் விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரி
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்
திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல
