கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று அதிகாலை பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
குறித்த சம்பவ இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பால சுரேஷ், மஞ்சுளா, அமைப்பாளர் பத்மநாதன் ஆகியோரும் சென்றிருந்த நிலையில் பக்கத்து விகாரையின் தேரர் (ஆமதுரு) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கை ஊடகமொன்று “மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு” என செய்தி வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் காட்டமானமுறையில் பதிவிடல் ஒன்றினை செய்துள்ளார்.
“அதிகாலையில் வட கொழும்பில் தீப்பிடித்த குடிசைகளை பார்க்க, போனபோது, அங்கிருந்த பக்கத்து விகாரையின் ஆமதுரு என்னோடு வாக்குவாதப்பட்டார்.
அவருடன் நாலு பேர் நின்றார்கள். தேரரும் (ஆமதுரு), அந்நபர்களும் ஆளும் மொட்டு கட்சிகாரர்கள். அதான் சண்டை.
ஆமதுரு பெளத்த தேரர் என்றால் எனக்கென்ன?
நமது ஆட்சியில் கட்டப்பட்ட மாடி வீட்டு திட்டத்தில், காலியாக பல வீடுகளை இவர்கள் மக்களுக்கு கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள். அதை சுட்டிகாட்டியதும் அவர்களுக்கு பொறுக்கலை.
இதை “மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு” என “தென்னிலங்கை ஊடகமொன்று செய்தியில் காட்டுகிறார்கள். அதை எடுத்து ஒரு தமிழ் இணையதளமும் செய்தி போடுகிறது.
அட போங்கடா…, பெளத்த ஆமதுரு என்பதால் நான் தலை குனிந்து மூடிக்கொண்டுவர வேண்டுமா? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் கு
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற
