தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்று கோவை தெற்கு. இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும் பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் இங்கு போட்டியிடுகிறார். கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் பார்த்தல் இந்த தொகுதி மக்கள் நீதி மய்யம் மற்றும் பாஜகவுக்கு இடையே இழுபறியாகத் தான் இருக்குமென தெரிகிறது.
அதனால், வானதி சீனிவாசன் அதிரடியாக களமிறங்கியிருக்கிறார். பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களை வரவழைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவைக்கு வந்திருந்தார். பெண்கள் சிலருடன் சேர்ந்து ஸ்கூட்டியில் ஊர்வலமாக சென்று வானதி வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது பேசிய ஸ்மிருதி இரானி, செல்வம் தாமரையில் அமர்ந்து தான் வரும் டார்ச் லைட்டில் வராது. புண்ணியம் செய்தால் வாழ்க்கையில் செல்வம் வரும். அந்த செல்வம் தாமரையில் அமர்ந்து தான் வரும் என மக்கள் நீதி மய்யத்தை விமர்சித்தார். மேலும், வளர்ச்சித் திட்டங்களின் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றி வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா? என கமல்ஹாசனுக்கு சவால் விட்டார்.


பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயண
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ
பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ
வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின்
