கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி , “நாட்டு மாடு பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதி போய்விட்டார்கள். ஒரு காலத்துல பெண்களுடைய இடுப்பு எட்டு மாதிரி இருக்கும் பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்து உட்கார்ந்து கொள்ளும் . ஆனால் நாட்டு மாடு குடித்து பெண்கள் இடுப்பு என்று பேரல் மாதிரி ஆகிவிட்டது. பிள்ளை இடுப்புல இருந்து வழுக்கிட்டு போகுது” என்றார். திண்டுக்கல் ஐ லியோனின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திண்டுக்கல் ஐ.லியோனி மீது, பெண் வழக்கறிஞர் சுபாஷினி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அத்துடன் ஐ.லியோனி பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவரது பதிவில், “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்” என்று தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.
இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, “பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மாட்டு பால் நல்லது என்று கூறி இருக்கலாம் அதை விடுத்து அந்த உதாரணம் தேவையற்றது” என்றார்.