வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களின் இந்த பண்டிகை இன்றும் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்திய பிரதமரும், தனது நல்ல நண்பருமான மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து சமூகம், எனது நல்ல நண்பர் நரேந்திர மோடி மற்றும் அதை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும், மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில் இந்தி மொழியிலும் ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி அவர் டுவிட்டரில் வீடியோ பதிவு மூலம் இந்திய மக்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு தொற்றுநோய், திருவிழாவை பாதிக்கும் என்றாலும் மக்கள் தங்கள் எதிர்காலத்தை இன்னும் அதிக நம்பிக்கையுடன் பார்க்க முடியும். பரந்த உலகுக்கு உதவும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா ஒரு மிகப்பெரிய வேலை செய்து வருகிறது. ஒற்றுமை உணர்வில் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துகள்.
இவ்வாறு ஸ்காட் மாரிசன் கூறினார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப
ரஷ்யா
போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள்
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
