More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் - 14 பேர் படுகாயம்!
தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் - 14 பேர் படுகாயம்!
Mar 29
தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் - 14 பேர் படுகாயம்!

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மக்காசர் நகரில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது.‌ ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்காக நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குழுமியிருந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு பிரார்த்தனை முடியும் தருவாயில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தேவாலயத்துக்குள் நுழைய முற்பட்டனர்.



ஆனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த தேவாலய ஊழியர்கள் அவர்களை நுழைவாயிலிலேயே நிறுத்தி விசாரித்தனர்.



அப்போது அவர்கள் இருவரும் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.‌ இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.‌ தேவாலயத்திற்குள் இருந்த அனைவரும் கடுமையாக பீதியடைந்தனர்.



இந்த குண்டு வெடிப்பில் தற்கொலை படை பயங்கரவாதிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் தேவாலய ஊழியர்கள் உள்பட 14 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தனர்.



இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தேவாலயத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.‌ அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



இதனிடையே தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் மத விவகாரங்களுக்கான மந்திரி யாகுத் சோலில் கவ்மாஸ், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug28

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க

May03

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற

Jan24

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட

Mar08

ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத

Feb04

தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகà®

Mar24

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய

Mar08

பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.à®

Mar07

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக சà¯

Apr10

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கடà¯

Feb04

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னà

May03

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க

Mar25

2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்கà

Mar18

வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி

Apr02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®

Jul20

டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:37 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:37 am )
Testing centres