More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஒரு வாரத்துக்கு வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்!
ஒரு வாரத்துக்கு வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்!
Mar 25
ஒரு வாரத்துக்கு வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்!

வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத்தில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது. அதைப்போல மீண்டும் ஒரு பாதிப்பு, வருகிற வாரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.



அதாவது நாளை மறுநாள் (27-ந் தேதி) மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் திறக்காது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை வட மாநிலங்களில் ‘ஹோலி’ விடுமுறை. இப்படி தொடர்ந்து 3 நாட்கள் வங்கிப்பணிகள் பாதிக்கப்படுகிறது. இடையில் மார்ச் 30-ந் தேதி வேலைநாளாக உள்ளது. 31-ந் தேதி வேலைநாளாக இருந்தாலும் நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை முழுவதுமாக கிடைக்காது என்று கூறப்படுகிறது.



இதைப்போல அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 1-ந் தேதி வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள் என்பதாலும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.



ஏப்ரல் 2-ந் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். 3-ந் தேதி வங்கிகள் திறக்கும். ஆனால் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும்.



இப்படி அடுத்தடுத்து விடுமுறை ஆவதால் பொதுமக்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே ஆலோசனை செய்து வங்கி தேவைகளை உரிய நாளில் நிறைவேற்றிக்கொள்வதும், வங்கி திறக்காத நாட்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதும் நல்லது என்று நிதி ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்à®

Jun20

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபà

Feb07

தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுà®

Oct05

நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட

Mar13

சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைà®

Sep16
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:01 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:01 am )
Testing centres