கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ரெயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரெயில் பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரைத்தார். மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்க அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 16-ந் தேதி முதல் இதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்ட மேற்கு ரெயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் துணைப்பை துண்டித்து விடுகிறது.
ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தாங்கள் இதை அமல்படுத்தி வருவதாக மேற்கு ரெயில்வே தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல் தற்போது வலியுறுத்தப்படுவதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெற்கு ரெயில்வேயும் அறிவித்துள்ளது.
இதனால் குறிப்பிட்ட, இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரெயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது.
ரெயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள ரெயில்வே, அதுகுறித்து பயணிகள் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல ரெயில்வே நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
கோவையில்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய தமிழகத்தில்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண் நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை
