களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும்,பிணையில் விடுதலையான குறித்த நபரை காவல்துறையினர் தாக்கியதாக அவரது மனைவி தெரிவித்தார்.
சம்பவத்தில் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் வைத்தியசாலையில் இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை அடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவர் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நாளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா
