More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சி - விமல் வீரவன்ச
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சி - விமல் வீரவன்ச
Apr 02
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சி - விமல் வீரவன்ச

எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன்னெடுத்தாலும் அவர்களின் பொறியில் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது,



“2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மானம் இலங்கைக்கு ஒருபோதும் ஆரோக்கியமான ஒன்றல்ல. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் எமது நாட்டின் இராணுவத்தைத் தண்டிக்கவும், நாட்டைத் துண்டாடவும் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும்.



அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரம் அனுமதி பெற்று இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.



மாறாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து அனுமதி பெறவும் இல்லை. அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும் இல்லை.



அதேபோல் ஜெனிவாவில் இந்தக் காட்டிக்கொடுப்பைச் செய்த காரணத்தால்தான், எமது இராணுவத்தில் பலர் கைதாகினர். புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்பட்டது. எம்மால் 30/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனை நிறைவேற்ற நாம் ஆட்சிக்கு வரவில்லை.



எமது அரசு எவருக்கும் அடிபணியாது. எமது நாட்டின் இறையாண்மை மற்றும் எமது இராணுவத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொள்கையில் நாம் பயணிக்கின்றோம்.



மேற்கத்தேய நாடுகள் கூறுவதற்கு அமைய சமாதான பாதையில் சென்று நாட்டை துண்டாடி கையில் கொடுத்தால் மஹிந்த ராஜபக்‌சவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கும்.



நோபல் பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டைத் துண்டாடுவதை விடுத்து நாட்டில் சமாதானம், அமைதியை உருவாக்கிக்கொள்ள பயங்கரவாதத்தைத் தோற்கடித்த காரணத்தால்தான் இன்றும் சர்வதேசம் எம்மைத் துரத்திக்கொண்டுள்ளது.



மனித உரிமை மீறல்கள், இராணுவக் குற்றம் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச நாடுகள் எம்மைத் துரத்திக்கொண்டு இருந்தாலும், எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை முன்னெடுத்தாலும் அவர்களின் பொறியில் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி

Nov04

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளà

Jun25

தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை à

Jul11

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருà

Jul26

வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்கà

Jan20

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நà

Mar11

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பà®

May22

கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு

Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Sep19

தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற நà

Feb28

கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிà

Feb24

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உà

Mar31

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பகà

Jun10

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்

Mar12

கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் à

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (09:44 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (09:44 am )
Testing centres