மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயபிரபாகரன் நேற்று மாலை வையம்பட்டி மற்றும் துவரங்குறிச்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
நான் முதன் முதலில் அரசியலை தொடங்கிய இடம் தான் இந்த மணப்பாறை. முதல் சட்டமன்ற தேர்தலில் நான் பிரசாரம் செய்கின்றேன். எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அ.தி.மு.க.விடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார். நல்ல கேள்வி தான். ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.
இப்போது அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஏனென்றால் அ.ம.மு.க.வில் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நம் கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவர் பேசும்போது, முஸ்லிம்களுக்கும், எங்களுக்கும் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு. சிறுபான்மை மக்களுக்கு விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்து கொண்டிருப்பார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சவுகத் அலி என வைக்கப்பட்டது. ஆனால் பாஸ்போட் உள்ளிட்ட தேவைகளுக்காக சண்முகபாண்டியன் என மாற்றினோம். இப்போதும் நான் வீட்டில் இருந்தால் சவுகத் என்று தான் அழைப்பேன் என்றார்.
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய à
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படà¯
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங௠மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் à நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சிà® இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையà கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற
