More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைப்பு!
கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைப்பு!
Apr 03
கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தலைவர்களின் சிலைகள் அனைத்தும் துணியால் மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி பகுதியில் உள்ள அண்ணா சிலையும் துணியால் மூடி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அண்ணாசிலைக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இதனால் சிலையை மூடி மறைத்து வைக்கப்பட்ட துணி எரிந்து சாம்பல் ஆனது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.



நேற்று காலையில் அந்த பகுதிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அண்ணா சிலை புகைபிடித்து கருமையான நிறத்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கே தி.மு.க.வினர் திரண்டனர்.



பின்னர் சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்யக்கோரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



அப்போது அண்ணா சிலைக்கு தீ வைத்த கும்பலை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். பின்னர் இது தொடர்பாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.



இதை ஏற்றுக்கொண்ட தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இதுதொடர்பாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணா சிலைக்கு தீ வைத்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.



இந்த நிலையில் தீ வைக்கப்பட்ட அண்ணா சிலையை வருவாய்த்துறை ஊழியர்கள் சுத்தம் செய்து மீ்ண்டும் துணியால் மூடினர்.



அண்ணாசிலைக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் மாதவச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug22

திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்

Aug12

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுà®

Jul21

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று 

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரதà¯

Sep08

மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொà®

Jan23

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாà

Feb12

ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்குமà¯

Apr03

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக

Sep26

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதà

May29

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,

Sep03

உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று

Oct07

திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டà®

Oct26

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தà¯

Jan20

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்

Mar12

தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:33 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:33 am )
Testing centres