கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி காட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைதுசெய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி, கோவை மாவட்ட விமான நிலையம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் தாராபுரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை பீளமேடு பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து, போராட்டக்காரர்களை கைதுசெய்த போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் பீளமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்à
தே.மு.தி.க. தலைவர்
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாசà® கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி த புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட௠சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு நà® மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித௠ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்à சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற
