மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டதில் சுமார் 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 10க்கும் குறைவானோர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
தான்சானியா அதிபராக இருந்தவர் ஜான் மகுஃபுலி. இவர் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கரோனா உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதய நோயும் இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 17-ஆம் தேதி மகுஃபுலி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து தான்சானியா நாட்டில் 14 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
மார்ச் 21-ஆம் தேதி உரு விளையாட்டரங்கில், மகுஃபுலியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டு 45 பேர் பலியாகினர். 37 பேர் காயமடைந்தனர்.
கூட்டத்தில் சிலர், வெளியேறும் வாயில்கள் வழியாக நுழைய முயன்றதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 45 பேர் பலியானதாகவும், காயமடைந்த 37 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காவல்துறை அதிகாரி கூறியதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்த
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக