கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்து பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு போட்டது, தேர்தல் விதிகளை மீறியதாக சர்ச்சையை உண்டாக்கிஉளள்ளது. கோவை மாவட்டம் தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத்தில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
அப்போது அவர் தாமரை சின்ன பேட்ஜ் அணிந்திருந்தார். இது, தேர்தல் விதிமீறல் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி மையத்தின் அருகில் 100 மீட்டர் வரை கட்சி சின்னங்களோ அவற்றை விளம்பரம்படுத்தும் விதமாக எந்தவிதமான நடவடிக்கைகளிலோ வேட்பாளர்களும், பூத் ஏஜண்டுகளும் செயல்படக்கூடாது.
அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும். இதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கட்சி சின்னத்தை அணிந்து தேர்தல் விதிமுறையை மீறிய வானதி சீனிவாசனை தகுதியிழப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள்
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்
சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக
