ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படையினரும் உயிரிழக்கின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 29ந்தேதி, அமெரிக்கா மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதன்பின்னர் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது என முடிவானது.
ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்தன.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் நார் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் ஒன்றின் மீது தலீபான் பயங்கரவாதிகள் இரவு நேரத்தில் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர 14 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த மோதலை மாகாண போலீசார் உறுதி செய்துள்ளனர். எனினும் தாக்குதல் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
இந்த தாக்குதலை தலீபான் பயங்கரவாதிகள் அமைப்பினை சேர்ந்த யூசுப் அகமதி என்பவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவி
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி த
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிற
அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ
சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு
விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி