இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13 பேரைக்கொண்ட ஒரு கும்பல் சிக்கியது. அத்துடன் 400 கிராம் போதைப்பொருளும் (மெத்தாம்பேட்டமைன்) சிக்கியது. இவர்கள் கைது செய்யப்பட்டு, மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதி, 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு திட்டம் போட்டுக்கொடுத்த ஈரானியருக்கு, அவரது மனைவியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஒரே நேரத்தில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. தண்டிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டு வழக்கப்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நா
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினை
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற