More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்- மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை!
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்- மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை!
Apr 11
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்- மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை!

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.



மேலும் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.



ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. இதில், பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் பொது மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது.



இந்த நிலையில் மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை ராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகோ நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் ஒரே நாளில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



கடந்த மாதம் 14-ந் தேதி யான்கூன் நகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையே மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 46 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது.



இதற்கிடையே ஷான் மாநிலத்தின் நாங்கமோன் என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி படை உள்ளிட்ட இனக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul18

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ

Jun01

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆயà¯

Jul02

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்டà

Feb15

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர

May13

அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ

Mar18

பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ

Mar24

அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு

Feb12

யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற நà

Apr03

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிà

Sep21

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த

Jan01

தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திரà

Oct21

தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரà

Apr08

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகஙà¯

Apr02

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயà

May18

ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உகà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:23 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:23 am )
Testing centres