வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெல்லிப்பளை காவற்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள், வாகனங்கள் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மோட்டர், புள்ளுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்காவற்துறையினர் கூறினர்.
காங்கேசன்துறை, தெல்லிப்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்றுக் கைது செய்யபட்டனர்.
விசாரணைகளின் போது சந்தேக நபர்களினால் கடந்த ஒன்றரை வருடங்களாக திருடப்பட்டு வந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த காவற்துறை அத்தியட்சகர் ஆனந்த ஹொட்டகச்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி காவற்துறை பரிசோதகர் மெர்சான் இந்துக்கலா சில்வா மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி தலைமையிலான பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
