ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆராதனை மேற்கொள்வதற்கு அனைத்து தேவாலயங்களிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகவே நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக விசேட ஆராதனைகள், மத நிகழ்வுகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவேதான் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி, விசேட பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு கொச்சிக்கடையிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் நடைபெறவுள்ளமையினால், தேவாலயத்தை சுற்றியுள்ள சில வீதிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4மணி முதல் மூடப்படுமென அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
