குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வர இருந்தார். இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2வது அலை வீசியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது.
டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என இங்கிலாந்தின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஸ்டீவ் ரீட் கூறுகையில் "அவர் இந்தியாவுக்கு பயணிப்பதை விட காணொலிக் காட்சி மூலமாக அதைச் செய்யலாம்" என கூறினார்.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ
69-வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாண
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி
உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை ந
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24-ம் திகதி
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும
