More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • எகிப்தில் பயணிகள் ரெயில் தடம்புரண்டு 11 பேர் உயிரிழப்பு!
எகிப்தில் பயணிகள் ரெயில் தடம்புரண்டு 11 பேர் உயிரிழப்பு!
Apr 20
எகிப்தில் பயணிகள் ரெயில் தடம்புரண்டு 11 பேர் உயிரிழப்பு!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்சவுரா நகருக்கு நேற்று முன்தினம் காலை பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.



நைல் டெல்டா பிராந்தியத்தின் கலியுபியா நகரிலுள்ள ஒரு ரெயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத வகையில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன.



 



இதையடுத்து ரெயிலின் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும், உள்ளூர் மக்களும் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தடம் புரண்ட ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த பயணிகளை அவர்கள் மீட்டனர்.



எனினும் இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 98 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரெயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த அந்த நாட்டின் அதிபர் அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார்.



இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக ரெயில் டிரைவர், அவரது உதவியாளர் மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகள் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



எகிப்தில் ஒரு மாதத்துக்குள் நடந்த 2-வது மிகப்பெரிய ரெயில் விபத்து இதுவாகும். கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள சோஹாக் மாகாணத்தில் 2 பயணிகள் ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்ததும், 185 பேர் படுகாயமடைந்ததும் நினைவுகூரத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec28

 ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படà¯

Aug07

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்à®

Jun10

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து

Mar03

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Jan26

நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  நீடிà

May29

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா à

Jun17

இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது

Jun26

இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை à®

Mar22

வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் à®

Jan29

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்à

Oct09

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றà

Jan30

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏà®

Mar29

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆயà

Apr03

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கà®

Apr25

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:39 am )
Testing centres