நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் கோரி பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ் கெய்த் விசாரித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அதுவரை, விசாரணை கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சோனியா காந்தி உள்ளிட்டோர் சார்பில் தருணும் சீமா ஆஜராகி, கொரோனா காரணமாக தங்களது அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பதில் அளிக்க முடியவில்லை. எனவே பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதி, பதில் அளிக்க கூடுதல் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை மே 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வ
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட
காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொர
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவ