யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் சிகிச்சைப் பெற்ற நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
