டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தொடங்கியது. நாடு சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் மாநாடு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு, நேற்று டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தொடங்கியது. இது, 3 நாள் மாநாடு ஆகும்.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மாநாட்டை தொடங்கி வைத்தார். போருக்கு எப்போதும் தயாராக இருப்பதற்காக விமானப்படைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முதல் நாள் மாநாட்டில், கிழக்கு லடாக்கில் உள்ள சூழ்நிலை உள்பட நாடு சந்தித்து வரும் ஒட்டுமொத்த பாதுகாப்பு சவால்கள் குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாடு சந்திக்கும் எதிர்கால சவால்களை கருத்திற்கொண்டு, விமானப்படையின் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வியூகங்கள் குறித்தும் அதிகாரிகள் இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்துகிறார்கள். விமானப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்வாழ்வு நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கிறார்கள்.
மாநாட்டில், விமானப்படையின் அனைத்து பிராந்திய தலைமை அதிகாரிகள், அனைத்து முதன்மை அதிகாரிகள், தலைமை இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா
உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத
உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வய
