ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
அந்த தளத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு 3 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ராக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்ற இரு ராக்கெட்டுகளும் ஊருக்குள் போய் விழுந்தன.
இந்த தாக்குதலில் துருக்கி வீரர் ஒருவர் பலியானார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால் துருக்கி படைகள், ஈராக்கில் இருந்து கொண்டு குர்தீஷ் இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
எனவே துருக்கி படைகள் நடத்தி வருகிற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த தாக்குதலை குர்தீஷ் போராளிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த குர்தீஷ் இன போராளிகளை துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண
ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்
அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத