தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412' ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் 2 விமானிகளும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மஷோனாலேண்ட் மாகாணத்தின் ஆக்டூரஸ் நகரிலுள்ள ஹூகூரு என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் ஹெலிகாப்டர் நடுவானில் திணறியது. இதையடுத்து ஹெலிகாப்டரை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.
ஆனால் அவர்களின் கட்டுக்குள் வராத ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.
இந்தக் கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதுமட்டுமின்றி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
அதேசமயம் அந்த குழந்தையின் தாயும், சகோதரியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த கோர விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடு
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல் டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத் வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவி வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித் தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க