இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமைப்புகளை கடுமையாக பாதித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏராளமான நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர்.
ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் துணை நிற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறி உள்ளார்.
இந்திய அரசாங்கத்தில் எங்கள் கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இந்திய மக்களுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார வீரர்களுக்கும் கூடுதல் ஆதரவை விரைவாக வழங்குவோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இந்த தொற்றுநோயை தைரியமாக எதிர்த்துப் போராடும் இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கூடுதல் பொருட்கள் மற்றும் ஆதரவை வழங்குவோம்’ என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உறுதி அளித்துள்ளார்.
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
ரஷ்யா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்
ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்த
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ