நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு –பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர்கள் இருவரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறப்பட்டிருந்தது.
விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மீண்டும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
