கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனோ தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு தடுப்பூசி நிறுவனங்களுக்கு மக்களின் பணம்தான் கொடுக்கப்பட்டது. அதே மக்கள் தற்போது தடுப்பூசிகளுக்கு உலகத்திலேயே அதிக விலையைக் கொடுக்க மத்திய அரசு வைத்திருக்கிறது. மோடி நண்பர்களின் லாபத்துக்காக, மீண்டும் ஒருமுறை மக்களை அரசமைப்பு கைவிட்டுவிட்டது’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், ‘நாட்டில் 12.12 கோடி மக்களுக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியும், 2.36 கோடி மக்களுக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசியும் போடப்பட்டிருக்கின்றன. இது வெறும் 8 சதவீதம்தான்’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத்தே, ‘மக்களால் அடுத்த தடுப்பூசி கட்டத்துக்கு ‘கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை’ என்று புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ள அசாம் மாநில பா.ஜ.க. மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘உங்களின் தவறான தகவல் யுத்தத்தில் தடுப்பூசிகளை பயன்படுத்தாதீர்கள். உயிர்களை காப்பது முக்கியம். தடுப்பூசிகளின் விலையைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங பா.ம.க. நிறுவனர் டாக்டர்
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட