ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சண்டையின்போது பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், பர்கினோ பசோவில் உள்ள ஷலீல் மாகாணம் யாடகூ கிராமத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாதுகாப்பு படை வரும் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அந்த கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கிராம மக்கள் பலர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கà
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரà
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்à®
கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாட
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிரà
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிà®
சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவலà¯
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் à®
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை à
கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உளà¯
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதறà¯
தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுபà
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்குà®
