தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதில் கைகோர்த்தன.
தற்போது மேற்கூறிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ரஷியா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தொடர்பாக பிற நாடுகளுடன் ரஷியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் வருகிற 2024-ம் ஆண்டுடன் காலாவதியாகிறது. இந்த சூழலில் தான் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
அதே சமயம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் 2024-க்கு அப்பால் ஒத்துழைப்புக்கான படிவங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் போது, இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும் ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளி
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்
உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை
ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர
பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்க
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
