ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்டு தலையீட்டை தடை செய்யும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன.
இந்த சட்டங்கள் சீனாவுக்கு எதிரான பாரபட்சம் கொண்டவை என சீனா கடுமையாக விமர்சித்தது. மேலும் இந்த விவகாரம் ஆஸ்திரேலியா சீனா இடையிலான உறவை மோசமாக்கியது. இந்த நிலையில் இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.
சீனாவின லட்சிய திட்டமான “பெல்ட் மற்றும் சாலை” திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண அரசுடன் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சீன அரசு ஏற்படுத்திக் கொண்ட 2 ஒப்பந்தங்களைதான் ஆஸ்திரேலியா தற்போது ரத்து செய்துள்ளது.
இது தவிர விக்டோரியா மாகாண கல்வி துறையுடன் கடந்த 1999-ம் ஆண்டு சிரியாவும் 2004-ம் ஆண்டில் ஈரானும் ஏற்படுத்திக் கொண்ட 2 ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடு
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறி
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க