ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள்ளி கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு ஜெலாட்டின் குச்சிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று வந்தது. சுரங்க தொழிலாளர்கள் சிலர் அதில் இருந்த ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைத்துள்ளனர்.
இதில், திடீரென அவை வெடித்து, அடுத்தடுத்து பரவி பாதிப்பு ஏற்படுத்தின. இந்த வெடிவிபத்தினால் அருகிலுள்ள கிராமங்களும் அதிர்ந்துள்ளன.
இதுதொடர்பாக, கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறுகையில், ஜெலாட்டின் குச்சிகள் அனைத்தும் புத்வெல் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டன. இந்த சுண்ணாம்பு சுரங்கம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைக்கும்பொழுது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களில் பலர் புலிவேந்துலா என்ற முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராம மக்கள் என கூறப்படுகிறது.
வெடிவிபத்து நடந்தபொழுது 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்தார்.
உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள
இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த
பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அ
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர