தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார். இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார்.
தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் ரவீனா ரவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகாவிற்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ ப
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்
விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கா
ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந
