More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்!
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்!
May 10
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்!

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும், 7-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவும் (பெலாரஸ்) மோதினர்.



இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, முதல் செட்டில் ஒரு கேமை கூட (6-0) இழக்காமல் அசத்தினார். ஒரு செட்டில் ஆஷ்லி பார்ட்டி ஒரு கேம் கூட வெல்லாதது கடந்த 4 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதன் பின்னர் 2-வது செட்டை கைப்பற்றி மீண்ட ஆஷ்லி, கடைசி செட்டில் சபலென்காவின் ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்தார்.



1 மணி 39 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சபலென்கா 6-0, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வாகை சூடி பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 2 வாரத்துக்கு முன்பு ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு சபலென்கா பழிதீர்த்துக் கொண்டார். அத்துடன் களிமண் தரை ஆடுகளத்தில் தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வென்றிருந்த ஆஷ்லியின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.



23 வயதான சபலென்கா கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பிறகு காயத்தால் அவதிப்பட்டேன். இதனால் மாட்ரிட் ஓபனில் இருந்து விலகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு 4 நாட்களில் காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்ததால் களம் திரும்பி இப்போது சாம்பியனாக நிற்கிறேன். இது எனக்கு வியப்புக்குரிய வாரமாக அமைந்தது’ என்றார்.



இது சபலென்காவுக்கு 10-வது சர்வதேச பட்டமாகும். அதே சமயம் களிமண் தரை போட்டியில் அவருக்கு இது முதல் மகுடமாகும். அவருக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் சபலென்கா 4-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். 2-வது இடம் பிடித்த ஆஷ்லி பார்ட்டிக்கு ரூ.1 கோடியே 68 லட்சம் கிடைத்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug03

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதà

Jan02

 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை

Sep16

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிà

May15

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர à

Mar27

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றிà®

Nov21

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தரà

Aug05

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவà®

Jan17

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.à

Jul21

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போà®

Mar20

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்கà®

Feb02

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற à

Jan17

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க

Feb24

ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு

Oct20

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போடà

Jan27

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (22:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (22:13 pm )
Testing centres