கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். திமுக ஆட்சி என்றழைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி தொழில் அமைதி மட்டுமே முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்களை தன் உற்றமிகு தோழனாகவே கருதி திமுக பாடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில்தான் மே தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது.
பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டது. தொழிலாளர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. நேப்பியர் பூங்கா மே தின பூங்கா என்று போற்றப்பட்டது.
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு
மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர
சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என
இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ
இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்
