மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் 2020, நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொடங்கிய போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் பல்பீர் சிங் ரஜவல் கூறியதாவது:
வரும் 26-ம் தேதியுடன் எங்கள் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைகிறது. இதை குறிக்கும் வகையிலும், பிரதமராக மோடி பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதையொட்டியும் 26-ம் தேதி, கறுப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று நாடு முழுதும் உள்ள மக்கள், தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந
தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச
கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய
தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம