More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவுக்கு 13 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவிய வெளிநாடுகள் - மத்திய அரசு தகவல்
இந்தியாவுக்கு 13 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவிய வெளிநாடுகள் - மத்திய அரசு தகவல்
May 17
இந்தியாவுக்கு 13 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவிய வெளிநாடுகள் - மத்திய அரசு தகவல்

இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.



அந்த வகையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து இந்தியா பெற்ற உதவிகளின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-



ஏப்ரல் 27 முதல் மே 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 13,496 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 11,058 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 19 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், 7,365 வென்டிலேட்டர்கள் மற்றும் சுமார் 5.3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் உலகளாவிய உதவியாக பெறப்பட்டது.‌



குறிப்பாக மே 14 மற்றும் 15-ந்தேதிகளில் கஜகஸ்தான், ஜப்பான், சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 500 வென்டிலேட்டர்கள், 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 40 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் மற்றும் முககவசங்கள், கவச உடைகள் பெறப்பட்டன. உலகளாவிய உதவியாக பெறப்பட்ட இந்த வளங்கள் அனைத்தும் தரைவழியாகவும் விமானங்கள் மூலமாகவும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec28

 மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல

Mar07

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள

May20

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுà®

Jul25

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலஙà¯

Sep07

இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Jun06

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அà®

Jun29

நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உளà¯

Sep14

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் à

Jun27
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:33 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:33 am )
Testing centres