நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட கலெக்டரை சந்தித்து முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினர்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை புத்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் ஷெரின் ராஜூக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த விக்டர் ராஜ் என்பவரது மகள் சூர்யாவுக்கும் நாகையில் நேற்று திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி தங்களது பெற்றோருடன் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்தை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், புதுமண தம்பதியை பாராட்டி திருமண வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க