ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே இ பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இரு தினங்களுக்கு முன் மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிக்கூடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி மாணவிகள் மரண ஓலம் விட்டனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த நகரையும் அதிர வைத்தது. முதல் கட்டமாக 25 மாணவிகள் பலியானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், குண்டு வெடிப்பில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்த கொடூர தாக்குதலையும் அவர்களே நடத்தி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
