சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவை விட ஒரு புள்ளி குறைவாக பெற்றிருக்கும் நியூசிலாந்து இரண்டாவது இடம் வகிக்கிறது.
இந்நிலையில், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தொடர்ந்து நம்பர் ஒன் ஆக வலம் வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
நம்பர் ஒன் மகுடத்தை சூடுவதற்கு மனஉறுதிமிக்க போராட்டமும் இலக்கை நோக்கி நிலையான முழு கவனமும் தேவை. இவற்றை தற்போதைய இந்திய அணி செய்து காட்டியுள்ளது. நம்பர் ஒன் இடத்துக்கும், பாராட்டுக்கும் இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான விதிமுறைகளில் பாதியில் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒவ்வொரு தடைகளையும் இந்திய அணி வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது. கடினமான நேரத்தில் நமது வீரர்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். அவர்களை நினைத்து சூப்பராக பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்