மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்களில் 1,25,000 பேரை சஸ்பெண்டு செய்து ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மியான்மர் ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.
மியான்மரில் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் 4.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளர
ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க