மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா சிட்டியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், குவெட்சால்டெனங்கோ நகரில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் கைதானவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இரு போட்டி குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பரஸ்பரம் தாக்கி உள்ளனர்.இதில் 4 கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த கலவரத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கவுதமாலா நாட்டில் ஆண்டுதோறும் நிகழ்கிற சுமார் 3,500 வன்முறை மரணங்களில் கிட்டத்தட்ட சரிபாதி, கும்பல்களால் நடத்தப்படுபவை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸà
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமà
உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க மà
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்கும
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து à
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ரà
