ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று.
அங்கு 36 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 87 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதேவேளையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
ஜெர்மனியின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டு விட்டது.
இதன் பலனாக அங்கு கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அந்த நாட்டு அரசு அறிவித்து வருகிறது.
ஜெர்மனி முழுவதும் மதுபான விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை பல மாதங்களுக்குப் பின் மீண்டும் வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளன.
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று
ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்தத
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில
எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது