அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிவிக்ரம் ரெட்டி. 39 வயதான இவர் அமெரிக்காவில் 3 ஆஸ்பத்திரிகள் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்து அதன்மூலம் மருத்துவ மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகள் மூலம் சுகாதார மோசடியில் ஈடுபட்டு வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ரகசியமாக விசாரணை நடத்தியதில் ரெட்டி காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி 52 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.376 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரம்) மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இந்த வழக்கில் ரெட்டியின் தண்டனை விவரம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரெட்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி அவர் மோசடி செய்த 52 மில்லியன் டாலரை காப்பீட்டு நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கவும் உத்தரவிட்டார்.
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா
ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான்
சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த
நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
