மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் அவர்கள் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. தூரம் சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், ‘‘சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மகாசுர்னே வரை 39.69 கி.மீ. தூரத்துக்கு தரமான கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது’’ என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் மந்திரி அசோக் சவான் சாதனை படைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார். இதேபோல மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை போடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை கà®
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவà®
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றà®
ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்கà®
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்தà®
மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம
நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எணà¯
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்குà
