More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக பாடுபடும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக பாடுபடும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Jun 06
தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக பாடுபடும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்க் கொடியைக் கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி - இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ் மொழிக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும்.



பரிதிமாற்கலைஞரில் தொடங்கி பல தமிழறிஞர்களும் 100 ஆண்டுகாலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, தலைவர் கருணாநிதியின் பெருமுயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தியும், பிரதமர் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங்கும் தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று வெளியானது. அதற்கான அரசாணை 12-10-2004 அன்று வெளியிடப்பட்டது.



உலகின் மூத்த மொழியும், திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும், இலக்கிய - இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக் காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு கருணாநிதி சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதியாகும்.



அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும்” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பà¯

Jun27
Jul25

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எà®

Jul14

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்தà¯

Jul10

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ

Jan20

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியà

Oct02

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நிà®

May25

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குறà®

Mar27

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருகà

Jan01

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி

May31

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சஙà

Jul03

தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மà

Jan31

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேà

Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:34 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:34 am )
Testing centres